Page Loader
மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 

மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 

எழுதியவர் Sindhuja SM
Apr 20, 2024
10:39 am

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே இரவில் "குண்டுவெடிப்பு" மூலம் அந்த இராணுவ தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவம் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று மறுத்துள்ளது. கால்சோ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர். முன்னாள் ஈரானிய ஆதரவு துணை ராணுவக் குழுவான ஹஷெட் அல்-ஷாபி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக் 

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை

ஒரே இரவில் நடந்த தாக்குதல், பொருள் இழப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பு, உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை தாக்கியது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயுதங்களை சேமிக்கும் கிடங்குகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து சமூக ஊடகங்களில் பேசிய அமெரிக்க இராணுவம், தங்கள் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளது. "இன்று ஈராக்கில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் செய்திகளை நாங்கள் அறிவோம். அந்தச் செய்திகள் உண்மையல்ல. இன்று ஈராக்கில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தவில்லை" என்று அது கூறியது.