அமெரிக்காவில் ஜெய்சங்கர் அதிரடி; டிரம்ப் அமைச்சர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான மெகா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார். தனது மூன்று நாள் பயணத்தின் முதல் நாளில், டிரம்ப் நிர்வாகத்தின் மிக முக்கிய அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசினார். முதலில் அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஸ்காட் பெசென்ட்-ஐ சந்தித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்தார். குறிப்பாக, வரி குறைப்பு மற்றும் சந்தை அணுகல் தொடர்பான அரசியல் முடிவுகளை எவ்வாறு கொள்கை ரீதியாக அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மார்கோ ரூபியோ
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோவுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ-வை சந்தித்த ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை குறித்து பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வர்த்தகம், எரிசக்தி, அணுசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்களைச் சீனாவிடம் இருந்து பெறாமல், தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும், இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜெய்சங்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pleased to meet US Treasury Secretary Scott Bessent in Washington DC today. @SecScottBessent
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 3, 2026
Had a useful discussion on advancement of India - US economic partnership and strategic cooperation.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/tfNMpTT8wH