Loading...
ஜென்சன் ஹுவாங் உளவுப் புகார் சர்ச்சை: ஆலிஸ் ஹுவாங் கடந்த ஆண்டே விலகிவிட்டதாக மெகாஸ்பீட் விளக்கம்
ஆலிஸ் ஹுவாங் கடந்த ஆண்டே விலகிவிட்டதாக மெகாஸ்பீட் விளக்கம்

ஜென்சன் ஹுவாங் உளவுப் புகார் சர்ச்சை: ஆலிஸ் ஹுவாங் கடந்த ஆண்டே விலகிவிட்டதாக மெகாஸ்பீட் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
03:49 pm

செய்தி முன்னோட்டம்

என்விடியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடன் தொடர்புபடுத்தப்பட்ட உளவுப் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆலிஸ் ஹுவாங் குறித்து சிங்கப்பூரின் மெகாஸ்பீட் நிறுவனம் மௌனம் கலைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியே ஆலிஸ் ஹுவாங் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டதாகவும், தற்போது தங்களது நிறுவனத்தில் அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும் மெகாஸ்பீட் தெரிவித்துள்ளது. மேலும் அவரது தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து தாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சட்ட விசாரணை

சீனாவுக்கு என்விடியா ஏஐ சிப்புகள் திருப்பி விடப்பட்டதா என வெளிப்புற சட்ட விசாரணை

சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் அலுவலகங்களைக் கொண்டுள்ள மெகாஸ்பீட், என்விடியா ஜிபியு சிப்புகளைக் கொண்ட கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கி வருகிறது.

அமெரிக்க தடை விதிகளை மீறி என்விடியா சிப்புகள் சீனாவிற்கு திருப்பி விடப்பட்டதாக எழுந்த ஊடக செய்திகளுக்கு ஆதாரமில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளது.

அனைத்து அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளையும் பின்பற்றுவதாக கூறியுள்ள மெகாஸ்பீட், இது குறித்து வெளிப்புற சட்ட ஆலோசகர்களைக் கொண்டு விரிவான உள்விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம்

உளவுப் புகார் குறித்து விசாரிக்கவில்லை என சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தல்

கடந்த 2025 பிப்ரவரி முதல் மெகாஸ்பீட் மற்றும் ஆலிஸ் ஹுவாங் மீது சர்வர் கொள்முதல் தொடர்பான தவறான அறிவிப்புகள் குறித்துச் சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சுங்கத்துறை விசாரணை நடத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆலிஸ் ஹுவாங் மீது உளவுப் புகார் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என அமைச்சகம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையே 2025 ஜூன் மாதம் அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகளும் மெகாஸ்பீட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

சிங்கப்பூரில் நுழைய தடை

தவறான தகவல் அளித்ததற்காக சிங்கப்பூரில் நுழையத் தடை விதிக்கப்பட்ட ஆலிஸ் ஹுவாங்

சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணையில் தவறான அறிவிப்புகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என 2026 பிப்ரவரியில் முடிவு செய்யப்பட்ட போதிலும், தனது பதவியை குறைத்து மதிப்பிட்டுக் காவல்துறைக்குத் தவறான தகவல்களை அளித்ததாக ஆலிஸ் ஹுவாங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

2026 பிப்ரவரி 26 அன்று பாஸ்போர்ட் திரும்ப வழங்கப்பட்டவுடன் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிய நிலையில், ஆறு பேர் மீதான விசாரணை தொடர்கிறது.

ADVERTISEMENT