Page Loader
ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை
நகோயா நகரின் கனயாமா ரயில்வே நிலையத்தில் பொதுமக்களை எக்ஸ்லேட்டர்களில் நின்று பயணிக்க அறிவுறுத்தும் ஊழியர்.

ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை

எழுதியவர் Srinath r
Oct 04, 2023
10:36 am

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் நாட்டின் நகோயா நகரில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்க தடை விதிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி பொதுமக்களால் எக்ஸ்லேட்டர்களில் நடந்து செல்ல முடியாது. நின்று மட்டுமே செல்ல முடியும். இச்சட்டம் ரயில்வே நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் என அனைத்து இடங்களில் உள்ள எக்ஸ்லேட்டர்களுக்கும் பொருந்தும். நகோயா நகரில் இச்சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் ஜப்பானில் இச்சட்டம் இயற்றப்படும் இரண்டாவது நகராகிறது. இதற்கு முன் சைதாமா நகரிலும் இது போன்ற ஒரு சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தில் தண்டனை விதிகள் எதுவும் இல்லை என்றாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இது ஏற்றப்பட்டுள்ளது.

2nd card

எக்ஸ்லேட்டர் விபத்துக்களால் திணறும் ஜப்பான்

ஜப்பான் அதன் எக்ஸ்லேட்டர் விபத்துகளுக்காக அறியப்படுகிறது. கடந்த 2018- 2019 ஆண்டில் மட்டும் 805 எக்ஸ்லேட்டர் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் எக்ஸ்லேட்டர்களை மக்கள் தவறாக பயன்படுத்தியது காரணமாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் பின்பற்றப்படும் வழக்கத்தின்படி, எக்ஸ்லேட்டர்களில் நின்று பயணிக்கும் மக்கள் இடதுபுறமாகவும், நடந்து செல்பவர்கள் வலது புறமாகவும் பயணித்து வந்தனர். நகோயா அரசு சார்பில் பதாகைகள், கார்ட்டூன்கள் உதவியுடன் இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் மூலம் எக்ஸ்லேட்டர் விபத்துகளை தடுக்க முடியும் என நகோயா நகர அதிகாரிகள் நம்புகிறார்கள்.