கைகலப்பில் ஈடுபட்ட இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வைரலாகும் காணொளி
ஜி7 உச்சி மாநாடு தொடங்கும் வேளையில் இத்தாலிய பார்லிமென்டில் உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமையன்று அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள் ஒரு மசோதா தொடர்பாக இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர். இத்தாலிய எதிர்க்கட்சி உறுப்பினர் லியோனார்டோ டோனோ, அமைச்சர் ராபர்டோ கால்டெரோலிக்கு இத்தாலிய கொடியை வழங்க முயற்சிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. டோனோ நெருங்கும்போது, கால்டெரோலி மூவர்ணக் கொடியை நிராகரித்து பின்வாங்குவதை காணலாம். சில நொடிகளில், ஹவுஸில் உள்ள மற்றவர்களும் சேர்ந்து, ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், குத்தி கொண்டும் காணப்பட்டனர். பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, கேள்விக்குரிய மசோதா சில பிராந்தியங்களுக்கு மேலும் சுயாட்சியை வழங்க முயன்றது.
கைகலப்பில் ஈடுபட்ட இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Shocking! Huge Fight Broke Out At #Italy's #Parliament While #GiorgiaMeloni Hosts #G7Summits Leaders #G7 pic.twitter.com/yiq6mqPDEi— Rozana Spokesman (@RozanaSpokesman) June 14, 2024