அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்
எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள இஸ்ரேலிகள் உடனே வெளியேறவும், மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாட்டில் உள்ள இஸ்ரேலியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்" - எகிப்து (சினாய் உட்பட), ஜோர்டான் மற்றும் மொராக்கோவிற்கான பயண எச்சரிக்கைகளின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." "மறு உத்தரவு வரும் வரையில், துருக்கி, எகிப்து (மற்றும் சினாய்), ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் மொராக்கோ ஆகிய மத்திய கிழக்கு அல்லது அரபு நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும்" எனக் கூறப்பட்டிருந்தது.
போராட்டங்களை காரணமாக சொல்லும் இஸ்ரேல் அரசு
"மலேசியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேஷியா உட்பட பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளுக்கும், மாலத்தீவுகள் போன்ற பயண எச்சரிக்கை இல்லாத இஸ்லாமிய நாடுகளுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்" என இஸ்ரேல் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு, இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளில், இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் பாலஸ்தீனியத்திற்கு ஆதரவான போராட்டங்களை காரணமாக இஸ்ரேல் கூறியுள்ளது. "நடந்துகொண்டிருக்கும் போரால், உலகெங்கிலும் உள்ள நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் கணிசமாக அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். "யூத மற்றும் இஸ்ரேலிய சின்னங்களுக்கு எதிராக விரோதமும் வன்முறையும் வெளிப்படுகின்றன" என இஸ்ரேல் அரசு தெரிவித்து இருப்பது குரு உட்படத்தக்கது.