அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் "இனப்படுகொலை" செய்வதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியதை அடுத்து, ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக இருக்கும் தகுதியை பாகிஸ்தான் இழந்துவிட்டதாக இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்ச்சை
கவாஜா ஆசிப்பின் சர்ச்சை கருத்துகளும் இஸ்ரேலின் கண்டனமும்
பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் தனது எக்ஸ் (X) தளத்தில், இஸ்ரேலை "மனிதகுலத்தின் சாபம்" என்றும், "புற்றுநோய் போன்ற நாடு" என்றும் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், காசா மற்றும் ஈரானை தொடர்ந்து தற்போது லெபனானிலும் இஸ்ரேல் ரத்தக் களரியை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. "அமைதி முயற்சிகளில் தன்னை ஒரு நடுநிலையான நாடாகக் காட்டிக்கொள்ளும் ஒரு அரசிடம் இருந்து இத்தகைய வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை ஏற்க முடியாது" என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Ayatollahs chanted “Death to Israel” - and now a so-called “mediator” is echoing the same language.
— Ambassador Yechiel (Michael) Leiter (@yechielleiter) April 10, 2026
You are not a mediator Mr. Asif, you are the problem.
Even if it is to your dismay, Israel is here to stay. That’s not for negotiation. pic.twitter.com/po7MEBUh4Q
எதிர்வினை
பதிவை நீக்கிய பாகிஸ்தான் அமைச்சர்
இஸ்ரேலின் கடுமையான எதிர்வினையை தொடர்ந்து, கவாஜா ஆசிப் தனது சர்ச்சைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். இருப்பினும், இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சார், அமைச்சரின் கருத்துகள் யூத எதிர்ப்புக் கொள்கையை வெளிப்படுத்துவதாகவும், இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சாடியுள்ளார். இந்த மோதலானது இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளது.