
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இஸ்ரேல் இன்று உறுதிப்படுத்தியது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த தகவலை இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்மாயில் கொலைக்கு அவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, அதே நேரத்தில் அதனை மறுக்கவுமில்லை.
இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்,"ஜூலை 13, 2024 அன்று, கான் யூனிஸ் பகுதியில் IDF போர் விமானங்கள் தாக்கப்பட்டது. மேலும் உளவுத்துறை மதிப்பீட்டைத் தொடர்ந்து, முகமது டெய்ஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறியது.
ட்விட்டர் அஞ்சல்
ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
We can now confirm: Mohammed Deif was eliminated.
— Israel Defense Forces (@IDF) August 1, 2024