Loading...
ஹார்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்த ஈரான்
அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணை திறப்பு: அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்த ஈரான்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா அளித்த பதவியை ஈரான் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது நிலையைத் தெளிவுபடுத்தும் வரை நீரிணை திறக்கப்படாது என்றும், தற்போதைய நிலையில் அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஈரானின் 7 நிபந்தனைகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், பல நிபந்தனைகள் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதாக ஈரானின் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். "அமெரிக்கர்களிடம் நாங்கள் முன்வைத்த 7 நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது; எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது" என்று அவர் கூறினா

பேச்சுவார்த்தை

அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

ஹார்முஸ் நீரிணை திறப்பு விவகாரத்துடன் தங்களது நாட்டின் அணுசக்தித் திட்டத்தை இணைத்து பேச அமெரிக்கா முயல்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய உடனடி கவனம் நீரிணையில் பாதுகாப்பை மீட்டெடுப்பது மட்டுமே என்றும், ஐநா அணுசக்தி ஆய்வாளர்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் கூறுகையில், ஈரான் தனது நிலைப்பாட்டைச் சற்று தளர்த்தியுள்ளதாகத் தோன்றினாலும், நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்குள் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், சவூதி அரேபியா மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து, சவூதி வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT