
ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, இந்திய மாணவர் ஒருவரை ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் கம்பியால் அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியான மெர்ரிலேண்ட்ஸில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
மெர்ரிலேண்ட்ஸ் பகுதிக்கு வேலைக்கு சென்றிருந்த 23 வயதுடைய இந்திய மாணவரை திடீரென்று சுற்றி வழைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் "கலிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற முழக்கங்களை எழுப்பியபடி தாக்க தொடங்கினர்.
இந்த தகவலை ஆஸ்திரேலியா டுடே என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஓட்டுநராக பணியாற்றி கொண்டே படித்து கொண்டிருக்கும் அந்த பாதிக்கப்பட்ட இந்தியா மாணவர் தன் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
சீவி
இந்த சம்பவத்தை இரு தாக்குதல்காரர்கள் வீடியோ பிடித்திருக்கின்றனர்
எனினும் அவர், "இன்று அதிகாலை 5.30 மணியளவில், நான் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது, 4-5 காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கினர்." என்று ஆஸ்திரேலியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் வாகனம் ஓட்டுவதற்காக தனது காருக்குள் ஏறியபோது திடீரென்று எங்கிருந்தோ தோன்றிய தாக்குதல் காரர்கள், தன் இடது கன்னத்தை குறி வைத்து தாக்க தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகு, அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து வெளியேற்றிய தாக்குதல்காரர்கள் நடு ரோட்டில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
இந்த சம்பவத்தை இரு தாக்குதல்காரர்கள் வீடியோ பிடித்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
அவரது தலை, கால் மற்றும் கைகளில் நன்றாக அடிபட்டிருக்கும் நிலையில், NSW காவல்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.