
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரதிநிதித்துவத்திற்கான புதிய அளவுகோல்களாக மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்தும் திட்டங்களை இந்தியா உறுதியாக எதிர்த்துள்ளது.
எதிர்கால கவுன்சிலின் அளவு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் குறித்த அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் (IGN) கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பி.ஹரிஷ், இதுபோன்ற பரிந்துரைகள் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவக் கொள்கையை சிறுமைப்படுத்துகின்றன என்று வலியுறுத்தினார்.
உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்களை தூதர் ஹரிஷ் விமர்சித்தார்.
அவை UNSC சீர்திருத்தங்களில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று கூறினார்.
மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஐநாவின் அடிப்படை நடைமுறைகளுக்கு முரணானவை என்றும் அர்த்தமுள்ள உரையாடலைத் தடம் புரளச் செய்யலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிராகரிப்பு
செயல்திறனை குறைக்கும் என்ற கருத்தை நிராகரித்தது இந்தியா
விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் (UNSC) செயல்திறனைத் தடுக்கும் என்ற கவலைகளையும் இந்தியா நிராகரித்தது.
உலகளாவிய சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள நவீன செயல் முறைகள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய சீர்திருத்த அமைப்பு வேண்டும் என வலியுறுத்தியது.
நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற வகைகளில் விரிவாக்கத்தை விலக்கும் சீர்திருத்த முயற்சிகள் அவற்றின் நோக்கத்தை அடையத் தவறிவிடும் என்றும், இது காலாவதியான நிலையை மட்டுமே கொண்டிருக்கும் என்றும் ஹரிஷ் எச்சரித்தார்.
பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய ஜி4 நாடுகளின் சார்பாகப் பேசிய ஹரிஷ், பிராந்திய பிரதிநிதித்துவம் UNSC சீர்திருத்தத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற குழுவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் மாற்றங்களுக்கு ஜி4 அழைப்பு விடுத்தது.