
உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அணு ஆயுதம் ஏந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் எல்லை தாண்டிய பதட்டங்களுக்கு மத்தியில், பதற்றத்தைத் தணிக்க வழிவகுத்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியதற்காக இரு நாடுகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரண்டு பக்கங்களிலும் ராணுவ தாக்குதல்கள், ட்ரோன் ஊடுருவல்கள் மற்றும் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் என உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைதி
அமைதியை மீட்டெடுக்க முயற்சி
போர் நிறுத்தம் மேலும் மோதலை நிறுத்தி பெரிதும் ராணுவமயமாக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க இராஜதந்திர முயற்சிகள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் நிதானத்திற்குத் திரும்ப ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்க் ரூபியாவும் டிரம்ப் அறிவிப்பை மேற்கோளிட்டு, இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவ தளபதி மைக் ரூபியோவிடம் சனிக்கிழமை பேசியதாக கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு மூலம், இதை உறுதிப்படுத்தி உள்ளார்.