
இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கவுன்சிலர் நீல் டார்பியின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டுக்கான மேயராக குஜராத்தில் பிறந்த யாகூப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரஸ்டன் நகரத்திற்கு ஒரு இந்திய-முஸ்லீம் மேயராவது இதுவே முதல்முறையாகும்.
"பிரஸ்டன் நகரின் மேயராக ஆனதில் நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். நான் சேவை செய்யும் சமூகங்களுக்கு நேர்மறையான முன்னேற்றங்களை ஏற்படுத்துவேன். மேலும், எனது மேயர் பதவியின் மூலம் கூடுதல் ஆதரவை வழங்குவேன்." என்று யாகூப் பட்டேல் கூறியுள்ளார்.
DETAILS
யாகூப் படேல் ஜூன் 1976இல் இங்கிலாந்துக்கு சென்றார்
படேல் இதற்கு முன்னதாக, மே 2022 முதல் பிரஸ்டன் நகரத்தின் துணை மேயராக பணியாற்றி வருகிறார்.
குஜராத்தின் பருச்சில் பிறந்த யாகூப் படேல், பரோடாவின் எம்எஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஏ மற்றும் எம்ஏ பட்டம் பெற்றார்.
யாகூப் படேல் ஜூன் 1976இல் இங்கிலாந்துக்கு சென்றார். அதன் பிறகு, 1979 ஆம் ஆண்டில் இருந்து பிரஸ்டன் கார்ப்பரேஷனுடன் இணைந்து உழைக்க தொடங்கினார்.
யாகூப் படேல் ஜூலை 4, 2009 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை, வருவாய் ஆய்வாளர், போக்குவரத்து ஆய்வாளர், உதவித் தலைவர், தலைமை ஆய்வாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் போன்ற பதவிகளில் பணிபுரிந்திருக்கிறார்.