Page Loader
இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு 
இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு

இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு 

எழுதியவர் Nivetha P
Oct 04, 2023
07:15 pm

செய்தி முன்னோட்டம்

இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான 70 வயதுடைய இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவர் தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கஜானாவில் வைக்காமல் பல கோடிகளை ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனு 

பாதுகாப்பு கோரி மனு தாக்கல் 

இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்து அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், மனரீதியாக இம்ரான் கான் சிறையில் துன்புறுத்தப்படுகிறார். அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சிறையில் வைத்தே அவருக்கு விஷம் வைத்து கொல்ல வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.