'நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்': இடைக்காலத் தேர்தல் குறித்து டிரம்ப் பதிவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் தனது தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், "நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நாங்கள் இமாலய வெற்றி பெற்றிருப்போம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும், மாகாண ஆளுநர் பதவிகளுக்கும் நவம்பர் 3 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
சமூக ஊடக பதிவு
ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் மற்றும் தேர்தல் முடிவுகள்
அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வலுவான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலவையான செனட் சபையில் பெரும்பான்மைக்குத் தேவையான 50 இடங்களைத் தாண்டி, ஜனநாயகக் கட்சி 51 இடங்களைக் கைப்பற்றியுள்ளது; குடியரசுக் கட்சி 39 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
கீழவையான பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி 154 இடங்களிலும், குடியரசுக் கட்சி 99 இடங்களிலும் வென்று முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் முடிவுகளில் குடியரசுக் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதேநேரம், தனது நேரடிப் பங்களிப்பு இல்லாததே இந்தச் சரிவுக்குக் காரணம் என்றும், தான் தீவிரமாகப் பிரச்சாரக் களத்தில் இருந்திருந்தால் பெரும் வெற்றியைப் பெற்றிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.