NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் 

    ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 11, 2024
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அவரைக் கொன்றதாகக் கூறப்படும் அவரது கணவர், விமானம் மூலம் ஊருக்குத் திரும்பி வந்து தனது குழந்தையை உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

    தனது கணவர் மற்றும் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சைதன்யா மதகனி என்ற பெண்ணின் உடல் சனிக்கிழமையன்று பக்லியில் ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு சக்கரத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலியான பெண் தனது தொகுதியை சேர்ந்தவர் என்று உப்பல் எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இந்தியா

    கொலை செய்ததை ஒப்புகொண்ட  மதகனியின் கணவர் 

    மேலும், உயிரிழந்த பெண்ணின் பெற்றோரை தான் சந்தித்ததாகவும் எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி கூறியுள்ளார்.

    அவரது பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், அந்தப் பெண்ணின் உடலை ஹைதராபாத்துக்குக் கொண்டு வர வெளியுறவு அலுவலகத்துக்கு கடிதம் எழுதியதாகவும் பண்டாரி லக்ஷ்மா ரெட்டி கூறியுள்ளார்.

    இது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் அலுவலகத்திற்கும் அவர் தெரியப்படுத்தி இருக்கிறார்.

    சைதன்யா மதகனியை கொன்றதை தங்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டியிடம் தெரிவித்துள்ளனர்.

    "உயிரிழந்த நபர் வின்செல்சியாவிற்கு அருகிலுள்ள பக்லியில் கிடந்தார். அதனையடுத்து துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் இறந்த நபரை மவுண்ட் பொல்லாக் சாலையில் மதியம் கண்டுபிடித்தனர்." என்று விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    ஹைதராபாத்
    கொலை

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    ஆஸ்திரேலியா

    INDvsAUS: ஆஸ்திரேலியாவிற்கு 400 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்
    INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா ஒருநாள் கிரிக்கெட்
    அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப் அமெரிக்கா
    தமிழக சட்டப்பேரவை - ஓபிஎஸ் இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை  ஓ.பன்னீர் செல்வம்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    கொலை

    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    பெங்களூர்: வீட்டில் யாரும் இல்லாத போது பெண் அரசு ஊழியர் கத்தியால் குத்திக்கொலை பெங்களூர்
    பெங்களூரு பெண் அரசு ஊழியர் கொலை வழக்கில் பெரும் திருப்பம்: முக்கிய குற்றவாளியான டிரைவர் கைது  கர்நாடகா
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025