LOADING...
அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?
மோஜ்தபா காமேனி

அலி காமேனியின் விருப்பத்திற்கு எதிராக அவரது மகன் மோஜ்தபா ஈரான் தலைவர் பதவிக்கு வந்தது எப்படி?

எழுதியவர் Prasanna
Mar 11, 2026
01:11 pm

செய்தி முன்னோட்டம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக (Supreme Leader) மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei) பொறுப்பேற்றுள்ளதன் பின்னணி குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மறைந்த உச்ச தலைவர் அலி காமேனியின் மகனான மோஜ்தபா, தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) அதீத ஆதரவுடன் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். இந்த IRGC இஸ்லாமிய சித்தாந்தத்தை பாதுகாக்கும் ஈரானின் மற்றொரு ராணுவ அமைப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் உதவியுடனே மோஜ்தபா காமேனி ஈரானின் உச்ச தலைவராகியுள்ளார்.

ஈரான்

வாரிசு அரசியலை எதிர்த்த அலி காமேனி

அலி காமேனி தனது வாழ்நாளில், தமக்கு அடுத்து தனது மகன் அந்தப் பதவிக்கு வருவதை வாரிசு அரசியல் என்ற அடிப்படையில் கடுமையாக எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஈரான் ஒரு குடியரசு என்றும், அங்கு வாரிசு முறைக்கு இடமில்லை என்றும் அவர் கருதியதாகத் தெரிகிறது. இருப்பினும், ஈரானின் அதிகார மையமாகத் திகழும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), நாட்டின் நிலைத்தன்மை மற்றும் தங்களின் செல்வாக்கைப் பாதுகாக்கும் நோக்கில் மோஜ்தபாவையே ஆதரித்தது. சமீபத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், IRGC அமைப்பானது மூத்த மதத் தலைவர்களை ஒருங்கிணைத்து மோஜ்தபாவை தலைவராக அறிவிக்க அழுத்தம் கொடுத்தது. 55 வயதான மோஜ்தபா, நீண்ட காலமாக ஈரானின் நிழல் அதிகார மையமாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement