Page Loader
ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது
82 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஹிட்லரின் பென்சில் விற்பனைக்கு வர இருக்கிறது

ஹிட்லரின் பென்சில் ஜூன் 6ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது

எழுதியவர் Sindhuja SM
Jun 04, 2023
08:00 am

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகப்பெரும் சர்வாதிகாரியாக கருதப்படும் ஹிட்லரின் 52வது பிறந்த நாளுக்கு அவரது காதலி பரிசாக கொடுத்த ஒரு பென்சில் ஏலத்திற்கு வர இருக்கிறது. 1941ஆம் ஆண்டு, அதாவது ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது நீண்டநாள் காதலி ஈவா-பிரவுன் அவருக்கு ஒரு பென்சிலை பரிசளித்தார். ஜெர்மன் சர்வாதிகாரிக்கு சொந்தமான இந்த பென்சில், வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் விற்கப்பட உள்ளது. ஹிட்லருக்கு சொந்தமானது என்று சொன்னாலே அதற்கு பெரும் மவுசு இருக்கும். இந்நிலையில், அந்த பென்சிலில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள் அதை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. 8.5 செமீ நீளம் கொண்ட இந்த பென்சில், ஹிட்லரது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அதில் ஈவாவின் பெயருடன் "AH"(அடால்ஃப்-ஹிட்லர்) என்ற இனிஷியலும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

details

82 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஹிட்லரின் பென்சில் 

இந்த வரலாற்று சிறப்புமிக்க பென்சில் தற்போது அதன் உரிமையாளரிடம் உள்ளது. அவர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஏலத்தின் போது அதை வாங்கினார். இந்த பென்சில் சுமார் 80,000 பவுண்டுகளுக்கு(அதாவது 82 லட்ச ரூபாய்) விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈவா பிரவுன் ஒரு ஜெர்மன் புகைப்படக் கலைஞர் ஆவார். அவர் 1929 இல் ஹிட்லரை முதன்முதலில் சந்தித்தார். ஹிட்லரை சந்திப்பதற்கு முன் அவர் ஒரு மாடலாகவும், ஹிட்லரின் தனிப்பட்ட புகைப்படக் கலைஞரான ஹென்ரிச் ஹாஃப்மேனின் உதவியாளராகவும் இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே 23 வயது வித்தியாசம் இருந்ததாக கூறப்படுகிறது. 1945இல் ஒரு சிறிய பதுங்கு குழியில் அவர்கள் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.