LOADING...
வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்
வெனிசுலாவில் போராட்டங்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது

வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2026
09:03 am

செய்தி முன்னோட்டம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சத்தங்களும், குண்டுவெடிப்புகளும் கேட்ட வண்ணம் உள்ளன. ஜனாதிபதி மாளிகையின் மீது ட்ரோன்கள் காணப்பட்டாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் அமெரிக்கா "சம்பந்தப்படவில்லை" என்று கூறியது. துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் CNN இடம் கூறினார்.

கைது

அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையும், அதைத்தொடர்ந்த நிக்கோலஸ் மதுரோ கைதும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில், அமெரிக்காவின் 'டெல்டா ஃபோர்ஸ்' கமாண்டோக்கள் வெனிசுலாவை தாக்கினர் (Operation Absolute Resolve). போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வந்த நிக்கோலஸ் மதுரோ, அவரது பதுங்கு குழியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த ராணுவ நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் இறையாண்மையை அமெரிக்கா மீறிவிட்டதாக ரஷ்யா மற்றும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம், வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க இதுவே சரியான வழி என அமெரிக்க ஆதரவு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

Advertisement