LOADING...
அமெரிக்க கனவுக்கு முட்டுக்கட்டை! 2027 வரை H-1B விசா நேர்காணல் கிடையாது
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் 2027 வரை H-1B விசா நேர்காணல் கிடையாது

அமெரிக்க கனவுக்கு முட்டுக்கட்டை! 2027 வரை H-1B விசா நேர்காணல் கிடையாது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
04:07 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) சார்பில் வழங்கப்படும் H-1B விசா நேர்காணலுக்கான தேதிகள் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் 2027-ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக Livemint அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்களில் 2027 வரை புதிய இடங்கள் இல்லை. ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்கள், விசா முத்திரைக்காக இந்தியாவிற்கு வந்தால் மீண்டும் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் இந்தியாவிற்கு வருவதைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது விசா வைத்திருப்பவர்கள் வேலை மாற விரும்பினால் அல்லது புதியவர்கள் வேலை தேடிச் செல்ல விரும்பினால், இந்த இரண்டு ஆண்டு காத்திருப்பு காலம் அவர்களது கரியரை பெரும் அளவில் பாதிக்கும்.

காரணம்

ஏன் இந்த விசா தாமதம்?

இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" கொள்கையாகும். 1. தீவிரக் கண்காணிப்பு (Vetting): விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் பின்னணியைத் தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், ஒரு விசாவை சரிபார்க்க அதிக நேரம் எடுக்கிறது. 2. கட்டண உயர்வு: ஏற்கனவே H-1B விசா கட்டணம் 1,00,000 டாலராக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நேர்காணல் இடங்கள் (Slots) கிடைக்காதது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 3. மூன்றாம் நாடு விசா தடை: இந்தியர்கள் இனி மற்ற நாடுகளில் (உதாரணமாக துபாய் அல்லது சிங்கப்பூர்) சென்று விசா முத்திரை (Stamping) பெறும் வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விண்ணப்பங்களும் இந்தியாவிற்கே திருப்பி விடப்பட்டுள்ளன.

Advertisement