கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்?
உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டேவிட் சாலமன் ஆவார். இந்நிறுவனம் பல்வேறு வகையான நிதி சேவைகளை வழங்கி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சரிவடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அதன் நுகர்வோர் சம்பந்தமான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வங்கித் துறையில் இந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தினை கண்டு வருகிறது. இதனடிப்படையில் தான் தற்போது இந்த பணி நீக்கம் குறித்த முடிவு எடுக்கப்பட்டு, வங்கி துறையில் 4000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் திறமையாக பணியாற்றாத ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.
செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனம்
இந்த பணி நீக்க நடவடிக்கையை வரும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது நிலவி வரும் சவாலான காலக்கட்டத்திலும் தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளில் இந்த நிறுவனம் செலவுகளை செய்துள்ளது. இதனால் பெரும் எதிர்கொண்டு வரும் இந்நிறுவத்தின் வளர்ச்சி விகிதம் சரியலாம் என்பதால், செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்நிறுவனம் தற்போது எடுத்து வருகிறது. முதலீடு துவங்கி, பத்திர சேவை, பல்வேறு நிதி சம்பந்தமான ஆய்வுகள் என பல விஷயங்களை இந்த நிறுவனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.