NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
    உலகம்

    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    September 08, 2023 | 09:04 am 1 நிமிட வாசிப்பு
    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
    ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு

    ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர், வழிகாட்டுதல்படி, COVID-19 பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவே, அவரால் புதுதில்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் சார்பாக, G20 உச்சிமாநாட்டில் ஸ்பெயினின் முதல் துணைத் தலைவர் நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவு மந்திரி ஜோஸ் மானுவல் அல்பரேஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோரை தொடர்ந்து இந்த ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து விலகிய மூன்றாவது உலகத் தலைவராக ஸ்பெயின் ஜனாதிபதி சான்செஸ் இணைந்துள்ளார்.

    இந்தியாவிற்கு புறப்பட்ட அமெரிக்கா ஜனாதிபதி

    ஜி20 மாநாடு நாளை தொடங்குவதால், பெரும்பாலான தலைவர்கள் இன்றே டெல்லியை வந்தடைகிறார்கள். இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று மாலை டெல்லி வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதும், அவர் இன்று அதிகாலை இந்தியாவிற்கு புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னர், தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், "நான் G20-க்கு செல்கிறேன் - சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றம் - அமெரிக்கர்களின் முன்னுரிமைகளில் முன்னேற்றம், வளரும் நாடுகளுக்கு வழங்குதல் மற்றும் G20க்கான நமது உறுதிப்பாட்டை வழங்கக்கூடிய ஒரு மன்றமாக காட்டுவதில் கவனம் செலுத்துகிறது. நாம் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், நாம் சிறப்பாக மாறுகிறோம்" என ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா ஜனாதிபதியின் ட்வீட் 

    I’m headed to the G20 – the premier forum for international economic cooperation – focused on making progress on Americans' priorities, delivering for developing nations, and showing our commitment to the G20 as a forum that can deliver.

    Every time we engage, we get better.

    — President Biden (@POTUS) September 8, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜி20 மாநாடு
    அமெரிக்கா
    ஜோ பைடன்

    ஜி20 மாநாடு

    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் புது டெல்லி
    ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    ஜி20 மாநாட்டின் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர்கள் வணிகம்
    'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா  சீனா

    அமெரிக்கா

    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே சனாதன தர்மம்
    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு  ஜோ பைடன்
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  ஜோ பைடன்

    ஜோ பைடன்

    செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு இந்தியா
    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் இந்தியா
    'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இந்தியா
    இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் மீண்டும் விவாதிக்க வாய்ப்பு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023