Loading...
ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மொஹ்சென் ரெசாய் நியமனம்; இவரின் முக்கியத்துவம் என்ன?
ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மொஹ்சென் ரெசாய் நியமனம்

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மொஹ்சென் ரெசாய் நியமனம்; இவரின் முக்கியத்துவம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
10:37 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், உச்ச தலைவரின் பிரதிநிதியாகவும் முன்னாள் ஐஆர்ஜிசி தளபதி மொஹ்சென் ரெசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் உச்ச தலைவர் முஜ்தபா காமேனி ஆகியோர் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதுவரை அப்பொறுப்பில் இருந்த முகமது பாகர் சோல்கதர் பதவி விலகியதைத் தொடர்ந்து, 71 வயதான மொஹ்சென் ரெசாய் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பின்னணி

8 ஆண்டு போர் அனுபவமும் புதிய நியமனத்தின் பின்னணியும்

1981 முதல் 1997 வரை ஈரான் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய மொஹ்சென் ரெசாய், ஈரான்-ஈராக் போரில் முக்கியப் பங்காற்றிய மூத்த ராணுவத் தளபதியாவார்.

அவரது நீண்டகால அனுபவத்தையும், நாட்டின் பாதுகாப்பிற்காக அவர் ஆற்றிய சேவைகளையும் பாராட்டி முஜ்தபா காமேனி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிக செல்வாக்கு கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது ஈரானின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி குறித்த ஈரானின் உறுதியான நிலைப்பாடு

உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஈரானின் முதன்மை நோக்கமாக உள்ளதை இந்த நியமனம் தெளிப்படுத்துவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அணு குண்டுகளை விட ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது எனக் கூறி வந்த மொஹ்சென் ரெசாய், எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி இன்றி எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் கடல் வழியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT