LOADING...
U -டர்ன் போட்ட எலான் மஸ்க்: டிரம்ப் குறித்த தனது சில பதிவுகளுக்கு வருத்தம் தெரிவித்தார்
டிரம்ப் குறித்த தனது சில பதிவுகளுக்கு வருத்தம் தெரிவித்தார் Elon musk

U -டர்ன் போட்ட எலான் மஸ்க்: டிரம்ப் குறித்த தனது சில பதிவுகளுக்கு வருத்தம் தெரிவித்தார்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2025
12:56 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த வாரம் வரை எலியும் பூனையுமாக முட்டி கொண்டிருந்த எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறவில் இன்று ஆச்சரியப்படுத்தும் நிகழ்வு நடந்துள்ளது. X நிறுவனம் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் புதன்கிழமை சமூக ஊடகங்களில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பற்றிய தனது கடந்தகால பதிவுகள் சில "மிக அதிகமான அளவிற்கு சென்றன" என்று ஒப்புக்கொண்டார். அமெரிக்க ஜனாதிபதியுடனான தொடர்ச்சியான பகைமை கருத்துகளுக்கு மத்தியில், மஸ்க், "டிரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன் - அவை மிக அதிகமாகச் சென்றன" என்று ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post