Page Loader
"எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது": டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார் எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார் எலான் மஸ்க்

"எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது": டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார் எலான் மஸ்க்

எழுதியவர் Venkatalakshmi V
May 29, 2025
08:07 am

செய்தி முன்னோட்டம்

கூட்டாட்சி அதிகாரத்துவத்தை நெறிப்படுத்தவும், சீர்திருத்தவும் முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் புதன்கிழமை அறிவித்தார். அரசாங்க செயல்திறன் துறையில்(DOGE) சிறப்பு அரசு ஊழியராக பணியாற்றிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க், அவருக்கு சொந்தமான சமூக ஊடக தளமான X இல் தனது பதிவிக்காலம் நிறைவுறுகிறது என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டார். "சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடையும் நிலையில், வீணான செலவினங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பிற்காக ஜனாதிபதி @realDonaldTrump-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் எழுதினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விமர்சனம்

டிரம்பின் மசோதாவை விமர்சித்த மஸ்க்

எலான் மஸ்கின் பதவி விலகல், ஜனாதிபதி டிரம்பின் "பெரிய அழகான மசோதா" வை குறிப்பிட்டு தான் ஏமாற்றமடைந்ததாக கூறியதன் மறுநாள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. CBS உடனான உரையாடலில், வரி குறைப்புக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடியேற்ற அமலாக்கத்தின் கலவையை உள்ளடக்கிய சட்டத்தை, கூட்டாட்சி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று மஸ்க் விவரித்தார். "ஒரு பில் பெரியதாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று மஸ்க் கூறினார். "ஆனால் அது இரண்டும் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை." என விமர்சித்தார்.