மரணத்தின் நித்தியம் குறித்துப் பேசிய சில நொடிகளில் பலி: சிலுவை கீழே விழுந்து பலியான கத்தோலிக்க பாதிரியார்
செய்தி முன்னோட்டம்
வாழ்க்கையின் தற்காலிகத்தன்மை மற்றும் மரணம் குறித்துச் சொற்பொழிவு ஆற்றிய சில நிமிடங்களிலேயே, அவருக்கு பின்னால் சுவரில் மாட்டியிருந்த பிரம்மாண்ட சிலுவை திடீரென சரிந்து தலையில் விழுந்த விபத்தில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈக்வடார் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்வடார் நாட்டில் அமைந்துள்ள 'Church of Our Lady of Perpetual Help' திருச்சபையின் தந்தையாக பணியாற்றி வந்த பாதிரியார் பட்ரிசியோ அல்ப்ரெடோ சான்செஸ் மொலினாரி, கடந்த சனிக்கிழமையன்று திருவழிபாட்டு நிகழ்வை நேரலை செய்து கொண்டிருந்தார். திருப்பீடத்திற்கு அருகில் நின்றுகொண்டு மக்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பாதிரியாரின் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய சிலுவை, எதிர்பாராதவிதமாக பெயர்ந்து அவரது தலை மற்றும் முதுகின் மீது பலமாகச் சரிந்து விழுந்தது.
விபத்து
மரணம் குறித்த சொற்பொழிவும் விபத்துத் தருணமும்
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த பக்தர்கள், உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பாதிரியார் மனித வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் மரணத்தின் இயல்பு குறித்தும் உருக்கமாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
"ஒரு நாள் நம்மில் அனைவரும் இறந்துவிடுவோம். சில விஷயங்களுக்காக நாம் செலவழிக்கும் நேரத்திற்கு கடவுளுடன் கழிக்கும் நேரத்தை விட அதிக அர்த்தம் இருப்பதில்லை" என்று அவர் கூறிய சில நொடிகளிலேயே இந்த எதிர்பாராத சோகம் அரங்கேறியுள்ளது.
சிலுவை எவ்வாறு திடீரென கழன்று விழுந்தது என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் தேவாலய நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"Un día, todos los que estamos aquí también vamos a morir"
— Consuelo Navarro 🇲🇽🇪🇸 (@Connie_Gdl) October 18, 2026
Las últimas palabras del padre Patricio Sánchez estremecen a los creyentes. Minutos después, una pesada cruz cayó del altar y le causó la muerte durante una misa en Guayaquil. 🙏🙌😢#PadrePatricioSánchez #Ecuador #DEP pic.twitter.com/d0E6In4kXn