LOADING...
'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்
கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம் (மாதிரி புகைப்படம்)

'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான அபுபக்கர் சித்திக், ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியவாறு அமைந்துள்ள ஆடம்பர வில்லாக்களுக்கான விளம்பர வீடியோ மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வெளியான இந்த காணொளி, இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் காணொளியில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான அந்த ஜலசந்தியை, வாங்குபவர்கள் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கலாம் என்று கூறி சித்திக் அந்த வில்லாக்களை விளம்பரப்படுத்துகிறார்.

கண்டனம்

சர்ச்சையை தூண்டும் அந்த வீடியோவிற்கு கடும் கண்டனம்

சித்திக்கின் விளம்பரம் இணையத்தில் ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது, பலர் புவிசார் அரசியல் மோதலை ஒரு விற்பனை உத்தியாகப் பயன்படுத்துவதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் விற்பனை உத்திகளில் வரம்புகளை மீறுவதாகச் சிலர் அந்த விளம்பரத்தை விமர்சித்தனர். ஐக்கிய அரபு அமீரகம் குறித்த இலட்சியப் பார்வைகளுக்கும் , மோதல் காலங்களில் அதன் யதார்த்தங்களுக்கும் இடையிலான இடைவெளியை இது எடுத்துக்காட்டுவதாக ஒரு பயனர் குறிப்பிட்டார். மற்றொரு பயனர், "ஏவுகணை மற்றும் குண்டு வீச்சுக் காட்சிகள்" கொண்ட வில்லாக்கள் விற்கப்படுவதாக நகைச்சுவையாக குறிப்பிட்டு, அந்த விளம்பரத்தின் தன்மையை கிண்டல் செய்தார்.

Advertisement