
பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்-ஸ்டைலில் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பிய குரங்குகள்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' பாணியில் இரு தினங்களுக்கு முன்னர், கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட குரங்குகள் அமெரிக்காவின் தென் கரோலினா ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து நவம்பர் 7, வியாழன் அன்று எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னணி அதிகாரிகள்.
ஃபேஸ்புக்கில் Yemassee காவல் துறை: "Alpha Genesis CEO Greg Westergaard இன்று சிபிஎஸ் செய்திகளிடம் கூறினார். ஒரு பராமரிப்பாளர் கதவுகளை சரியாக பூட்ட தவறியதால் 43 விலங்குகள் தப்பிவிட்டன." என தெரிவித்துள்ளது.
Beaufort கவுண்டியில் உள்ள Castle Hall சாலையில் உள்ள Alpha Genesis வசதியிலிருந்து 43 rhesus macaque primates தப்பியதாக Yemassee காவல் துறை புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
எச்சரிக்கை
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய விலங்குகள் சுமார் 6-7 பவுண்ட் எடையுள்ள மிகவும் இளம் பெண் குரங்குகள் என்றும், அவற்றின் வயது காரணமாக, அவை ஒருபோதும் சோதனைக்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் பொறிகளை அமைத்து, தெர்மல் இமேஜிங் கேமராக்களைப் பயன்படுத்தி தப்பியோடிய குரங்குகளை தேடி வருகின்றனர்.
"இந்த விலங்குகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக வைத்திருக்க குடியிருப்பாளர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்லவோ அல்லது செல்லமாக வளர்க்கவோ முயற்சிக்க வேண்டாம்" எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.