Page Loader
டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது 

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது 

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2024
09:16 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது. இந்த சம்பவத்தால் அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்தது என்று அவர் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த டிரம்ப் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், முகத்தில் ரத்தத்துடன் அவர் பேரணி மேடையில் இருந்து வெளியேறியற்றபட்டதாகவும் ரகசிய சேவை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, டிரம்ப்பை குறிவைத்து தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் குற்றவாளியும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு பார்வையாளர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். , "எனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா துளையிட்டது" என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கூறியுள்ளார்.

அமெரிக்கா 

டிரம்ப்பை சூழ்ந்து நின்று அவரை பாதுகாத்த பாதுகாப்பு படையினர் 

பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பு பேசி கொண்டிருந்த போது, அவர் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தன் காதை தோட்ட துளைத்ததும் உடனடியாக நிலைமையை உணர்ந்த அவர், மேடைக்கு பின்னால் முழங்காலில் அமர்ந்து மறைந்து கொண்டார். அதற்கு பிறகு, பாதுகாப்பாளர்கள் உடனடியாக டொனால்ட் டிரம்ப்பை சூழ்ந்து நின்று அவரை பாதுகாத்தனர். இந்த சம்பவம் குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் பரவலான கண்டனத்தைத் தூண்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இதைக் கண்டிக்க நாம் ஒரு தேசமாக ஒன்றிணைய வேண்டும்." என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.