காசா போரில் திருப்புமுனை: ஹமாஸ் அமைப்பின் முழுமையான ஆயுதக் களைவு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இதர ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலகிக் கொள்ளவும், காசாவில் புதிய பாலஸ்தீன நிர்வாகம் அமையவும் வழிவகை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். காசாவில் அமைதி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்பான 'போர்டு ஆஃப் பீஸ்' மூலமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிய படைகள்
கட்டம் கட்டமாக விலகும் இஸ்ரேலிய படைகள்
இந்த ஒப்பந்தம் மிகக் கவனமாக திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
ஆயுதக் களைவுப் பணிகள் நிறைவடையும் விகிதத்திற்கு ஏற்ப, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும்.
சர்வதேசப் பாதுகாப்புப் படையும், புதிய பாலஸ்தீன காவல் படையும் இணைந்து காசா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
காசா இனி தீவிரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும், இஸ்ரேலுக்கான பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு
புதிய பாலஸ்தீன அரசு அமைத்தல்
காசாவின் எதிர்கால நிர்வாகம் குறித்துப் பேசிய டிரம்ப், 'போர்டு ஆஃப் பீஸ்' அமைப்புடன் இணைந்து செயல்படும் புதிய பாலஸ்தீன அரசு காசாவை நிர்வகிக்கும் என்று தெரிவித்தார்.
இந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
போருக்கு பிந்தைய காசாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக 2026-ன் தொடக்கத்தில் சர்வதேச அமைப்பாக போர்டு ஆஃப் பீஸ் தொடங்கப்பட்டது.
டொனால்ட் டிரம்ப் இதன் நிறுவன தலைவராக செயல்பட்டு வருகிறார்.