டிரம்பை கொல்ல முயன்ற நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு' (WHCD) விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (31) மீது, அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்,"ஆலன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றார்" என்று நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆலன் மீது அதிபர் கொலை முயற்சி மற்றும் மாநில எல்லைகளைத் தாண்டி ஆயுதங்களைக் கொண்டு வந்தது மற்றும் வன்முறைச் சம்பவத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
அம்பலமான ரகசியங்கள்
திட்டமிட்ட தாக்குதல்: அம்பலமான ரகசியங்கள்
ஆலன் இந்தத் தாக்குதலை மிகவும் திட்டமிட்டு நடத்தியதற்கான ஆதாரங்களை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. தாக்குதலுக்கு பல வாரங்களுக்கு முன்பே (ஏப்ரல் 6) அவர் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்துள்ளார். கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டனுக்கு ரயிலில் பயணித்து, தனது திட்டத்தை செயல்படுத்தத் தயாராகியுள்ளார். அவரிடமிருந்து 12-கேஜ் பம்ப்-ஆக்ஷன் ஷாட்கன், செமி-ஆட்டோமேட்டிக் கைத்துப்பாக்கி மற்றும் மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மின்னஞ்சல்
"நான் ஒரு பெடரல் அசாசின்"- மின்னஞ்சல் தரும் அதிர்ச்சி
தாக்குதலுக்கு சற்று முன்பாக ஆலன் அனுப்பிய மின்னஞ்சலில், தன்னை ஒரு "நட்பான பெடரல் அசாசின்" என்று குறிப்பிட்டுள்ளார். அதில், "அமெரிக்கப் பிரதிநிதிகள் செய்யும் செயல்கள் என் மீதான பிம்பத்தைப் பிரதிபலிக்கின்றன. அதனால்தான் இதைச் செய்கிறேன்" என்று தனது நோக்கம் குறித்து அவர் எழுதியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிபர் மட்டுமின்றி, வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகளையும் குறிவைக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டின் போது ரகசியப் பாதுகாப்புப் படை(Secret Service) அதிகாரி ஒருவரின் மார்பில் குண்டு பாய்ந்தது. எனினும், அவர் அணிந்திருந்த புல்லட் புரூஃப் கவசத்தால் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் நடைபெறும் முக்கியப் பொது நிகழ்வுகளின் பாதுகாப்பு முறைகளை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.