Loading...
உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்
உடம்பை சொறிந்துவிட்டு மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் சீன இளைஞர்

உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார். இந்த மையங்களில் வாடிக்கையாளர்களின் உடம்பை லேசாக சொறிந்துவிடும் பிரத்யேக சேவை வழங்கப்படுகிறது. இந்த வித்தியாசமான தொழில் மூலம் அவர் மாதம் சுமார் 1,00,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ₹14.18 லட்சம்) வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

தொழில் யோசனை

சிறுவயது நினைவிலிருந்து உருவான புதிய தொழில் யோசனை

கடந்த ஆண்டு இணையத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் முதுகை சொறிந்துவிடும் வீடியோவைப் பார்த்த ஜாங், மக்கள் இதற்குப் பணம் கொடுக்கத் தயார் என்று பதிவிட்டிருந்த கமெண்ட்களைக் கவனித்தார்.

இது அவருக்குச் சிறுவயதில் தந்தை முதுகு சொறிந்துவிட்டுத் தூங்க வைத்த நினைவை நினைவூட்டியது.

ஏற்கனவே பல தொழில்களில் தோல்வியை சந்தித்த இவர், மன அழுத்தத்தைக் குறைக்கும் இந்த சேவையை ஒரு புதிய தொழிலாக மாற்ற முடிவெடுத்தார்.

கட்டணம்

ஒரு மணி நேர சேவைக்கு கட்டணம் எவ்வளவு?

இந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் முகத்தைக் கீழ்நோக்கிப் படுத்துக் கொள்ள, நீண்ட நகங்களைக் கொண்ட ஊழியர்கள் அவர்களின் உடம்பைப் பிரத்யேக நுட்பங்களுடன் மெதுவாக சொறிந்துவிடுவார்கள்.

ஒரு மணி நேர சேவைக்கு 300 யுவான் (சுமார் $40 / ₹3,500) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வழக்கமான மசாஜ் சிகிச்சையை விட இது மிகவும் நிம்மதியையும், மன அழுத்தத்திலிருந்து விடுதலையையும் தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

100 கிளைகள்

சீனா முழுவதும் 100 கிளைகள் தொடங்கும் திட்டம்

தற்போது இவரது கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் ஆண்களாவர்.

இந்தத் தொழிலுக்கு முன்மாதிரி எதுவும் இல்லாததால், சொறியும் புதிய நுட்பங்களை ஜாங்கே சொந்தமாக உருவாக்கினார்.

தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சேவையை சீனா முழுவதும் சுமார் 100 கிளைகளாக விரிவாக்கம் செய்யவும், சொறிந்துவிடுதலை ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT