
வாரன் பஃபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார்
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் நீண்ட கால நண்பரும், அவரின் தொழில் பங்குதாரருமான சார்லி முங்கர் நேற்று காலமானார். அவருக்கு வயது 99.
"சார்லி முங்கரின் குடும்பத்தினர் அவர் நேற்று காலை கலிபோர்னியா மருத்துவமனையில் உயிரிழந்தார்" என அவர் பல தசாப்தங்களாக பஃபெட்டின் கீழ் துணைத் தலைவராக பணியாற்றிய, பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் அறிவித்தது.
"சார்லியின் உத்வேகம், மற்றும் பங்களிப்பு இல்லாமல் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தை இப்போது இருக்கும் நிலைக்கு உயர்த்தி இருக்க முடியாது" என வாரன் பஃபெட் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
2nd card
யார் இந்த சார்லி முங்கர்?
பஃபெட் போலவே முங்கரும், அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தின் ஒமாஹா பகுதியில் பிறந்தார். இவர்கள் இருவரும் 1959ல் சந்தித்துக் கொண்ட நிலையில், இவர்களது நட்பு 6 தசாப்தங்களுக்கு தொடர்ந்தது.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவராக 1978ல் ஆண்டு பணிக்கு சேர்ந்த சார்லி முங்கர், சிறிய ஜவுளி நிறுவனமாக இருந்த அதை, மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கினார்.
தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு, $780 பில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பஃபெட் போல் அல்லாமல் முங்கர், தனது பெரும்பான்மையான சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி விட்டார். இவருடைய சொத்து மதிப்பு $2.6 பில்லியன் ஆகும்.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறாத முங்கர், ஜனவரி ஒன்றாம் தேதி அன்று தனது நூறாவது வயதை எட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.