Loading...
கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடா கல்வி விசா புதிய விதிகள்

கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
03:06 pm

செய்தி முன்னோட்டம்

கனடாவில் உயர்கல்வி பயிலத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. வரும் செப்டம்பர் 1, 2026 முதல் விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்கள், தங்களது முதலாண்டு வாழ்க்கை செலவுகளுக்காகத் தங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச நிதித் தொகையை கனடிய அரசு உயர்த்தியுள்ளது. கியூபெக் மாகாணத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் படிக்க செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும்.

கூடுதல் செலவு

கூடுதல் செலவுத் தொகையின் முழு விவரங்கள்

இதுவரை ஒரு தனிநபர் மாணவர் தங்களது வாழ்க்கை செலவுக்காக 22,895 கனடிய டாலர் காட்ட வேண்டியிருந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் அது 23,448 கனடிய டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது மாணவர்கள் தங்களின் முதல் வருட வாழ்க்கைச் செலவுக்காக கூடுதலாக 553 கனடிய டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,000க்கும் மேல்) அதிகமாகக் காட்ட வேண்டும்.

இந்த வாழ்க்கை செலவுத் தொகையானது, மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் மற்றும் இருவழிப் பயண செலவுகளிலிருந்து முற்றிலும் தனித்துவமான தொகையாகும்.

குடும்பம்

குடும்பத்தினருடன் செல்லும் மாணவர்களுக்கான புதிய விதிகள்

மாணவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் உடன் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கான நிதித் தேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு (மாணவருடன் சேர்த்து) 29,192 கனடிய டாலர் மற்றும் மூன்று நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 35,888 கனடிய டாலர் என நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கனடாவில் பகுதிநேர வேலைகளை மட்டுமே நம்பியிருக்காமல், படிப்பை நிறைவு செய்யத் தேவையான நிதியைத் தங்களது சொந்த மூலங்கள் மூலம் வைத்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்யவே கனடிய குடிவரவுத் துறை இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

தேவையான ஆவணங்கள்

மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள்

கனடா விசா பெற விரும்பும் மாணவர்கள் தங்களது நிதி ஆதாரத்தை நிரூபிக்க வங்கி அறிக்கைகள், கல்விக்கடன் ஒப்புதல் கடிதங்கள், கல்வி உதவித்தொகை ஆவணங்கள் அல்லது முன்கூட்டியே செலுத்திய கட்டண ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்.

டொராண்டோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் விசா வழிகாட்டுதல்களை ஏற்கனவே புதுப்பித்துள்ளன.

எனவே, செப்டம்பர் 1க்கு பிறகு விசா விண்ணப்பம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் இந்த கூடுதல் நிதி வரம்பைக் கணக்கில் கொண்டு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT