18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் விவாகரத்து பெறுவதாக நேற்று அறிவித்தனர். தங்களது 18 வருட திருமண உறவிலிருந்து விலகுவதாக இருவரும் தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், "சோபியும், நானும் இந்த உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீண்ட ஆலோசனைக்கு பின்னர் நாங்கள் இருவரும் கலந்து பேசி பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தி கொண்டுள்ளோம். அது தொடரும். எங்கள் குழந்தைகளின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி" என்று பதிவிட்டிருந்தார். சிறு வயது நண்பர்களான ஜஸ்டினும், சோபியும் 2003 முதல் காதலித்து, 2005ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் திருமணம் செய்து கொண்டனர்.