Page Loader
மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான 'வழிகளை' பரிசீலிக்கும் டிரம்ப்: அரசியலமைப்புப்படி அது சாத்தியமா?
மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான 'வழிகளை' பரிசீலிக்கும் டிரம்ப்

மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான 'வழிகளை' பரிசீலிக்கும் டிரம்ப்: அரசியலமைப்புப்படி அது சாத்தியமா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2025
11:46 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்டபடி ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். எனினும் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை டொனால்ட் டிரம்ப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையும் அவர் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். அதை சாத்தியமாக்குவதற்கான "வழிகளை" பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

உரை

3வது முறை ஆட்சி செய்ய வழிகளை ஆலோசிப்பதாக கூறினார் டிரம்ப்

NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், மூன்றாவது முறையாகப் பதவியேற்க முயற்சிப்பது குறித்து தான் கூறியது "நகைச்சுவையாக இல்லை" என்று கூறிய டிரம்ப், 2029ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் நாட்டை வழிநடத்துவதற்கு எதிரான அரசியலமைப்புத் தடையை மீறுவதற்கான வழிகளைக் கருத்தில் கொண்டுள்ளார் என்பதற்கான குறிப்புகளை அவர் கூறினார். இந்த ஜனவரி மாதம், அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். இது அவருடைய இரண்டாவது ஆட்சியாகும். முன்னதாக 2017- 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராகவும் அவர் பதவி வகித்தார். "எப்படிப் பார்த்தாலும், நமக்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியிருப்பதால், மூன்றாவது முறையாகப் பதவியேற்பது பற்றி இப்போது நான் பேச விரும்பவில்லை" என்று டிரம்ப் மேலும் கூறினார்.

அரசியலமைப்பு

ஒரு அமெரிக்க ஜனாதிபதி மூன்றாவது முறையாக பதவி வகிக்க முடியுமா?

அமெரிக்கா அரசியலமைப்பு 22 வது திருத்தம் குறிப்பிட்டுள்ளதன்படி, நாட்டில் ஒரு ஜனாதிபதி இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்- தலா நான்கு ஆண்டுகள். இருப்பினும், ஒரு ஜனாதிபதி இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடிய சில சூழ்நிலைகள் உள்ளன-ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகப் பணியாற்றினால் அல்லது ஒரு துணை ஜனாதிபதி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் மரணம், ராஜினாமா அல்லது பதவி நீக்கம் காரணமாக ஜனாதிபதியாகி, அந்த பதவிக்காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகப் பணியாற்றினால், அவர்கள் கூடுதலாக இரண்டு முழு பதவிக்காலங்களுக்கு போட்டியிடலாம். அப்படி பதவியேற்கும் பட்சத்தில், அவர்கள் மொத்தம் 10 ஆண்டுகள்(பகுதி பதவிக்காலத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் மற்றும் தலா நான்கு ஆண்டுகள் கொண்ட இரண்டு முழு பதவிக்காலங்கள்) பணியாற்றலாம்.