Page Loader
CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை 
CAA விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் CRS அறிக்கை தெரிவித்துள்ளது

CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 22, 2024
01:39 pm

செய்தி முன்னோட்டம்

மார்ச் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) சில விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை தெரிவித்துள்ளது. CRS அறிக்கைப்படி,"சிஏஏ-வின் முக்கிய விதிகள் - மூன்று நாடுகளில் இருந்து ஆறு மதங்களைச் சேர்ந்தவர்கள்-முஸ்லிம்களைத் தவிர்த்து- குடியுரிமைக்கான பாதையை அனுமதிப்பது -இந்திய அரசியலமைப்பின் சில விதிகளை மீறலாம்." 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட CAA- வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 31, 2014 க்கு முன் வந்த முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.

சாத்தியமான அபாயங்கள்

CAA மற்றும் NRC இந்திய முஸ்லிம்களின் உரிமைகள் அச்சுறுத்தப்படும்

ஜோ பிடன் நிர்வாகம், இந்தியாவின் இந்த CAA சட்டத்தின் மீது பலமுறை கவலை தெரிவித்ததுடன், அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்தது. "மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசுத் துறை கூறியது. சிஆர்எஸ் அறிக்கையானது, முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (என்ஆர்சி) இணைந்தால், சிஏஏவின் சாத்தியமான தாக்கங்கள் பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது. இந்தச் இணைப்பு மூலம், இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதிக்கப்படலாம் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.