பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஆண்கள் போதைப்பொருள் கொடுப்பது, பலாத்தகாரம் செய்வது போன்ற செயல்களால் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்து உள்துறைச் செயலர், சில பிரிட்டிஷ்-பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்தில் சிறுவர் துஷ்பிரயோக நெட்வொர்க்கை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட பிரேவர்மேன், "பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்" என்றும் "அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்" என்றும் கூறி இருக்கிறார்.
1,400 பலாத்கார வழக்குகள் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மீது போடப்பட்டுள்ளது
நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், காவல்துறை, பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆண்களைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பதாக பிரேவர்மேன் கூறினார். இனவெறி என்று அழைத்துவிடுவார்களோ என்ற பயமும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர்கள் அமைதி காப்பதாக பிரேவர்மேன் குற்றம்சாட்டியுள்ளார். இங்கிலாந்தில் 1997ஆம் ஆண்டு முதல் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதாக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) முன்னாள் தலைவர் விக்ரம் சூட் கூறி இருக்கிறார். அவரது கூற்றுப்படி, 2014 வரை சுமார் 1,400 பலாத்கார வழக்குகள் பெரும்பாலும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் முஸ்லீம் அல்லாத பிரிட்டிஷ் பெண்களை குறிவைத்து மிருகத்தனமாக பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.