பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
பிலிப்பைன்ஸ்-பினன்ஹொன் என்னும் நகரிலிருந்து தலிம் தீவுக்குச்செல்ல ஏரி வழியாக படகில் 70 பயணிகள் நேற்று(ஜூலை.,27)பயணித்துள்ளனர். அப்போது திடீரென பலத்தக்காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் படகு நிலைத்தடுமாறி, அதிலிருந்த பயணிகள் அனைவரும் ஒரேப்பக்கம் சாய்ந்துள்ளனர். மொத்த எடையும் ஒரேப்பக்கம் சாய்ந்ததால் கட்டுப்பாட்டினை இழந்த படகு ஏரியில் கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்தோர் அனைவரும் நீரில் மூழ்கத்துவங்கியுள்ளனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனினும். இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 26 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. விபத்து குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், 42 பயணிகள் மட்டுமே பயணிக்கவேண்டிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள்யாருக்குமே உயிர்காக்கும் கவச உடை வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.