அடுத்த செய்திக் கட்டுரை

வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா
எழுதியவர்
Sindhuja SM
Mar 03, 2023
06:53 pm
செய்தி முன்னோட்டம்
பூமியே நீல வானமாக மாறிவிட்டதோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கும் ஒரு அழகான நீல வனத்தின் வீடியோவை IAS அதிகாரி ஹரி சந்தனா பகிர்ந்துள்ளார்.
இந்த அழகான காட்சி இணையவாசிகளை மெய்மறக்க செய்துள்ளது.
இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஹரி சந்தனா, கண்களுக்கு எட்டும் தூரம் வரை வெறும் நீலமான மலர்கள் மட்டும் இருக்கும் ஒரு அற்புதமான மலைப்பகுதியின் காட்சியை இணையவாசிகளுடன் பகிர்ந்துள்ளார்.
சில சிற்றுலா பயணிகளும் இந்த மலைகளுக்கு இடையில் உலா வருவது நமக்கு தெரிகிறது.
இந்த மலரின் பெயர் நெமோபிலா என்றும் இந்த காட்சியில் இருக்கும் இடம் ஜப்பானில் உள்ள இபராக்கி ப்ரிபெக்சர் கடற்கரையில் உள்ள ஜென் ஷின் ஹிட்டாச்சி கடற்கரை பூங்கா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
IAS அதிகாரி ஹரி சந்தனா பகிர்ந்த வீடியோ
Caption this... pic.twitter.com/sZQ46GKONt
— Hari Chandana (@harichandanaias) March 2, 2023