ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கள்கிழமை(ஆகஸ்ட் 14) குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், இஸ்லாமிய அரசு(IS) என்னும் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் நகர்ப்புறங்களில் நடந்த பல பெரிய தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தாக்குதல் நடந்த பகுதி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளதால், நீண்ட காலமாக அந்த பகுதியில் வன்முறை நடந்து வருகிறது. 2021இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டுவெடிப்புகள் மற்றும் பிற வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர்