NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன?
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.

    சனிக்கிழமை (மே 10) மாலை ஆலோசகர்கள் குழுவின் அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாட்டில் இடைக்கால அரசு உருவான பிறகு நடக்கும் அரசியல் மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

    இந்தத் தடை அடுத்த வேலை நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்த 2024 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான மாணவர் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    சட்டத் திருத்தம்

    பங்களாதேஷ் சட்டத்தில் திருத்தம்

    அவாமி லீக்கை தடை செய்யும் இந்த நடவடிக்கைக்கான சட்ட அடிப்படையை ஆதரிக்க, ஆலோசகர்கள் கவுன்சில் பங்களாதேஷில் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ஐசிடி) சட்டத்தை திருத்தியது.

    இதன் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மீது வழக்குத் தொடர அனுமதித்தது.

    தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவாமி லீக் தலைவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான விசாரணைகளில் ஈடுபடும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கும் இந்தத் தடை அவசியம் என்று முகமது யூனுஸ் அரசாங்கம் கூறியது.

    இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எந்த அரசியல் கட்சியையும் தடை செய்வது தவறு என எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஷேக் ஹசீனா
    பங்களாதேஷ்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா
    சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை;  ஒரு இன்னிங்ஸில் 10 வீரர்கள் ரிட்டயர்டு அவுட்; எந்த போட்டியில் தெரியுமா? மகளிர் கிரிக்கெட்
    இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    தேசிய தொழில்நுட்ப தினம் 2025: நாளின் முக்கியத்துவமும் வரலாற்று பின்னணியும் தொழில்நுட்பம்

    ஷேக் ஹசீனா

    பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்  பங்களாதேஷ்
    பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு  பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது டெல்லி
    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் பங்களாதேஷ்

    பங்களாதேஷ்

    பங்களாதேஷ் வெள்ளத்திற்கு இந்தியா காரணமா? குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியா
    800 மில்லியன் டாலர் கட்டணத்தை செலுத்துங்கள்; பங்களாதேஷுக்கு அதானி நிறுவனம் வலியுறுத்தல் அதானி
    பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் மீண்டும் அனுமதி கலிதா ஜியா
    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்  வங்கதேச அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணி

    உலகம்

    தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்
    மின்னணு சாதனைகளுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தது டிரம்ப் நிர்வாகம் டொனால்ட் டிரம்ப்
    வெளிநாட்டினர் அனைவரும் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்; கெடு விதித்து அமெரிக்கா உத்தரவு அமெரிக்கா
    சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு அமெரிக்கா

    உலக செய்திகள்

    அமெரிக்காவின் ATF செயல் தலைவர் பதவியிலிருந்து காஷ் படேல் நீக்கம்; புதிய தலைவர் யார்? அமெரிக்கா
    6,000 உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப் நிர்வாகம்; காரணம் என்ன? டொனால்ட் டிரம்ப்
    உலகின் பிஸியான விமான நிலையமாக துபாய் தேர்வு; டாப் 10இல் இடம் பிடித்த ஒரே இந்திய விமான நிலையம் துபாய்
    ஏலத்திற்கு வரும் மகாராஜாக்களுக்குச் சொந்தமான அரிய நீல வைரம்  ஏலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025