NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்
    பிரான்சில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்த பெண்மணி

    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்

    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை: 'மண் காப்போம்' இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து கோவைக்கு சைக்கிலிலேயே 7 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி பிரான்ஸ் நாட்டில் தனது சொந்த ஊரான டூலோன் நகரிலிருந்து 50 வயதான நதாலி மாஸ் புறப்பட்டுள்ளார்.

    இத்தாலி ஸ்லோவேனியா, குரோஷியா, பல்கேரியா, துருக்கி, ஓமன் போன்ற நாடுகள் வழியாக சைக்கிளில் பயணித்து வந்த இவர் கடந்த மாதம் 1ம் தேதி இந்தியாவை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    30கிமீ., பயணம்

    உத்வேகமாக அமைந்த ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம்-நதாலி மாஸ்

    இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து நதாலி மாஸ் அவர்கள் தற்போது கோவை மாவட்டம் , ஈஷா மையத்திற்கு வந்துள்ளார்.

    இதுகுறித்து நதாலி மாஸ் கூறுகையில், 'மண் காப்போம்' இயக்கத்துக்காக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனிநபராக மேற்கொண்ட 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம் தான் தனது பயணத்துக்கான உத்வேகமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

    மேலும், ஜக்கி வாசுதேவை ஸ்விட்சர்லாந்திலும், பாரிசிலும் 'மண் காப்போம்' பயணத்தின் பொழுது சந்தித்ததாக கூறினார்.

    அவரது செயல்கள் மிக நெகிழ்ச்சி அடைய செய்தது என்று கூறிய நதாலி மாஸ், அரசியல் கட்சி தலைவர்கள் 'மண் காப்போம்' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை

    சமீபத்திய

    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025