LOADING...
அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் 
ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம் 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2024
06:20 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய ஊழியர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் வேலை நேரம் முடிந்த பிறகு, நிறுவனத்தின் தொடர்பைப் புறக்கணிக்கும் உரிமையைப் பெற உள்ளார்கள். கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், வேலை நேரத்திற்கு வெளியே தங்கள் முதலாளிகளின் தொடர்பைக் கண்காணிக்கவோ, படிக்கவோ அல்லது பதிலளிக்கவோ மறுக்கும் ஊழியர்களைப் பாதுகாக்கிறது. இந்த சட்டம் ஊழியர்களுக்கு அலுவலக நேரத்திற்கு வெளியே தங்கள் மொபைல் சாதனங்களை அணைக்க உரிமை அளிக்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளில் ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படபோது, ​​சட்டத்தை அவசரமாகவும் குறைபாடுடையதாகவும் இருப்பதாக நிறுவனங்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

திங்கட்கிழமை முதல் அமலாகிறது சட்டம்