'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண்
பொதுவாக விமான பணிப்பெண்கள் அவ்வளவு எளிதில் பயணிகளிடம் கோபப்பட மாட்டார்கள். விமானத்தில் பிரச்சனை செய்யும் பயணிகளை கூட எளிதாக கையாளக்கூடிய திறன் கொண்டவர்கள். ஆனால் சில நேரங்களில் சில பயணிகள் அப்படிப்பட்ட விமானப்பணி பெண்களையே கோபப்பட வைத்து விடுகிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு தான் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் அரங்கேறியுள்ளது. பயணி ஒருவர் கேட்ட உணவு தங்கள் மெனுவில் இல்லாததால், அவர் முன்பு உள்ள திரையில் உள்ள உணவு வகையில் ஒன்றினை ஆர்டர் செய்யும்படி விமானப்பணிபெண் அவரிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த பயணி கையை நீட்டி கத்தி பேசியுள்ளார். இதற்கு அந்த பணிப்பெண் அழுது கொண்டே முன் பக்கம் உள்ள பணிப்பெண்கள் அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
"நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரர் அல்ல" - கோபத்தில் கத்திய விமானப்பணி பெண்
இதனையடுத்து, பணிப்பெண்களின் மூத்த ஹோஸ்ட் அந்த பயணியிடம், 'ஏன் கத்தி கையை நீட்டி பேசினீர்கள்?" என்று கேள்வி எழுப்ப, அதற்கு அந்த பயணி. "நீங்கள் பயணிகளின் வேலைக்காரர்" என்று கூறியுள்ளார். மேலும் கோபமுற்ற பணிப்பெண், "நான் ஒரு பணியாளர், உங்கள் வேலைக்காரர் அல்ல" என்று கூறியுள்ளார், ஒரு கட்டத்தில் அந்த பயணி, "ஏன் கத்துகிறாய், வாயை மூடு" என்று கூற, அதற்கு அந்த பெண், "உங்கள் வாயை மூடுங்கள்" என்று சண்டையிடுகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து இண்டிகோ நிறுவனம், "பயணிகளின் நலம் தான் எங்கள் நோக்கம். ஆனால் அந்த பயணி எங்கள் க்ருவை மோசமாக பேசியுள்ளார்" என்று விளக்கம் அளித்துள்ளது.