
அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்தி முன்னோட்டம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
"பொது ஒழுங்கை கடுமையாக மீறும் நடவடிக்கைகள்", கடத்தல் மற்றும் அதற்கு நிதியுதவி செய்ததார் என்ற குற்றசாட்டுகள் அவர் மீது போடப்பட்டுள்ளதாக வியாஸ்னா மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.
60 வயதான பியாலியாட்ஸ்கியின் ஆதரவாளர்கள், பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் சர்வாதிகார ஆட்சி பியாலியாட்ஸ்கியின் வாயை அடைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மூன்று பேரில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர்.
2021ஆம் நடந்த தேர்தலின் போது தெரு போராட்டங்கள் செய்ததற்காக இவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது, எதிர்க்கட்சிக்கு நிதியளிப்பதற்காக பணம் கடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வியாஸ்னா
லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்: வியாஸ்னா
2020இல் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் அராஜகத்தை எதிர்கொண்டனர். மேலும், லுகாஷென்கோ விமர்சகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது, பியாலியாட்ஸ்கி இரண்டு சக பிரச்சாரகாரர்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இவருடன் கைது செய்யப்பட்ட வாலண்டைன் ஸ்டெபனோவிச் மற்றும் விளாடிமிர் லாப்கோவிச் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளது.
ஸ்டெபனோவிச்சிற்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும் லாப்கோவிச்சுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை 1996இல் பியாலியாட்ஸ்கியால் நிறுவப்பட்ட வியாஸ்னா கூறியுள்ளது.