LOADING...
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்; ISIS-K முகாம்கள் அழிப்பு
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ட்ரோன் தாக்குதல்; ISIS-K முகாம்கள் அழிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
07:54 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைப் பதற்றம் தற்பொழுது ஒரு புதிய போர் சூழலாக மாறியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் கோரசன் (ISIS-K) பயங்கரவாத அமைப்பின் முகாம்களைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் ட்ரோன் மூலமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா ஆகிய மாகாணங்களில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

விளக்கம்

"ஆப்கானிஸ்தானில் நாசவேலைத் திட்டம்": தலிபான்கள்

தாக்குதலை நியாயப்படுத்தி தலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் நாசவேலைகளைச் செய்ய பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் முகாம்களில் திட்டமிடப்பட்டதாக கூறியுள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் சரண் பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் பதுங்கு குழியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். தலிபான்களின் இந்த ட்ரோன் தாக்குதலில் பல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தரப்பில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பதிலடி

பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல்

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 49 பேர் காயமடைந்ததாகவும் ஐநா தூதரகம் (UNAMA) தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசு தரப்போ, 38 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 163 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும், வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 29 தீவிரவாதிகளை மடிந்ததாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வாதிடுகிறது.

Advertisement