
மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மார் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன என்று வசந்த புரட்சி மியான்மர் முஸ்லிம் வலையமைப்பின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர் துன் கீ திங்களன்று தெரிவித்தார்.
இதுவரை நிலநடுக்கத்தில் கொல்லப்பட்ட 1,700 க்கும் மேற்பட்டோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில், மசூதிகளில் கொல்லப்பட்டவர்களும் அடங்கியுள்ளனரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
பலி எண்ணிக்கை
மியான்மார் நிலநடுக்கத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மியான்மரை தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக, இடிபாடுகளில் இருந்து அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் அரசு நடத்தும் எம்ஆர்டிவிக்கு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் நெய்பிடாவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே உட்பட பரவலான சேதம் ஏற்பட்டது.
மண்டலே அருகே மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் நகரின் விமான நிலையம் போன்ற பிற உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.