LOADING...
பாங்காக்கில் பிரபலமான பிரெஷ் உணவு சந்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டார்

பாங்காக்கில் பிரபலமான பிரெஷ் உணவு சந்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2025
01:58 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான ப்ரெஷ் உணவு சந்தையில் திங்கட்கிழமை நடந்த ஒரு பெரிய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பாதுகாப்பு காவலர்கள் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை அடையாளம் காண போலீசார் பணியாற்றி வருவதாகவும் பாங்காக்கின் பேங் சூ மாவட்டத்தின் துணை காவல்துறைத் தலைவர் வோராபட் சுக்தாய் AFP இடம் தெரிவித்தார்.

விசாரணை

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

"காவல்துறையினர் இதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். இதுவரை இது ஒரு பெரிய துப்பாக்கிச் சூடுதான்," என்று சுக்தாய் AFP இடம் கூறினார். தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான சமீபத்திய எல்லை மோதல்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று தேடுவதாகவும் அவர் கூறினார். நான்காவது நாளில் எல்லை மோதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 150,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் தாய்லாந்து தரப்பைச் சேர்ந்தவர்கள்.

சுற்றுலாத் தலம்

பாங்காக்கில் உள்ள Or Tor Kor சந்தை

துப்பாக்கிச் சூடு நடந்த ஓர் டோர் கோர் சந்தை, பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான பிரெஷ் உணவு சந்தையாகும். இது ஒவ்வொரு வார இறுதியிலும் கூட்டத்தை ஈர்க்கும் மற்றொரு முக்கிய சுற்றுலா தலமான Chatuchak சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் தளர்வான துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் அமலாக்கத்தின் காரணமாக தாய்லாந்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் அசாதாரணமானது அல்ல.