உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டி சாதனை புரிந்த 5 வயது பஞ்சாப் சிறுவன்
உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம். இந்த சிகரத்தை, மிக இளம் வயதில் ஏறிய நபர் என்று சாதனையை புரிந்துள்ளார் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங். டெக்பீர் சிங், கடந்த 18ஆம் தேதி கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற ஆரம்பித்து, 23ஆம் தேதி அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்துள்ளார். டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்கு துணையாக, அவரின் தந்தையும் அவருடன் மலை எறியுள்ளார். டெக்பீர், அவரது தந்தை, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் இரண்டு துணைப் பணியாளர்கள் அடங்கிய குழு, ஆறு நாட்களில் மலையேற்றத்தை முடித்துள்ளது.
Twitter Post
சிறுவனின் சாதனை உத்வேகம் அளிக்கிறது என அம்மாநில DGP பாராட்டு
மகனின் இந்த சாதனை தொடர்பாக கருத்து வெளியிட்ட தந்தை, "டெக்பீர் சிங் இதற்காகக் கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். டெக்பீர் சிங் சாதனைக்கு அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெக்பீரின் உறுதியும், நெகிழ்ச்சியும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக டிஜிபி கூறியுள்ளார். அவரது சாதனை மற்றவர்களை முன்னேற ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார்.